Ads Area

ஒரே நாளில் 13,203 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.53 லட்சம் பேர் பலி..!!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.  தற்போது புதிய பாதிப்பு 13 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும்  குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.53 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர்,  இறப்பு விகித நிலவரம்  குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,203 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,06,67,736- ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 131 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,470 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,298 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின்  எண்ணிக்கை 1,03,30,084 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,84,182 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 96.83% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக  குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.73% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,303 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* இந்தியாவில் இதுவரை மொத்தம் 16,15,504 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 5,70,246 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 19,23,37,117 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe