Ads Area

முழு மருதமுனைப் பிரதேசமும் சுய தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்) 

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய மருதமுனை பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க மருதமுனை தொடக்கம் பெரியநீலாவனை வரைக்குமான முழு மருதமுனை பிரதேசமும் நேற்று (09.01.2021) மாலை 7.00 மணியில் இருந்து சுய தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளின் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மாலை 6.00 மணியுடன் மூடுதல், வீதிகள் மற்றும் கடற்கரை பிரதேசங்களில் ஒன்றுகூடுவது தவிர்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் முகக் கவசம் அணிந்து கொள்ளுதல், சமூக இடைவெளியை பேணுதல் என்பன அவசியமாக பின்பற்றப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக பதுகாப்பு தரப்பினரின் உதவியோடு கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Thanks - battinews



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe