Ads Area

விளாஸ்டர் பிரீமியர் லீக் கிறிக்கட் சுற்றுப்போட்டி : சம்பியனானது மாஸ்டர் பிளாஸ்டர் அணி !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த விளாஸ்டர் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் கழக முகாமையாளர் எம்.எல். பஸ்மீரின் தலைமையில் நடைபெற்றது.

பிரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் டில்ஷான் அதாஉல்லா, இலங்கை வெட்மின்டன் சம்மேளன பொதுச்செயலாளரும் சர்வதேச காற்பந்து நடுவருமான அலியார் பைஸர், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் ஏ.சி.ஷரீபுத்தீன், உதவியதிபர் டீ.கே.எம். சிராஜ், கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட், கழக தலைவர் முகம்மட் இம்தாத், கழக பொதுச்செயலாளர் ஏ.சி.எம். நிஸார் , தொழிலதிபர்கள் என பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மாஸ்டர் பிளாஸ்டர் அணியின் சார்பில் அணித்தலைவர் ஆஸாத்தின் அதிரடியான  துடுப்பாட்டத்தினால் 10 ஓவர்கள் முடிவில் 137 ஓட்டங்களை பெற்று கொண்ட மாஸ்டர் பிளாஸ்டர் அணி ரெட் லயன்ஸ் அணியினருக்கு 138 எனும் வெற்றியிலக்கை நிர்ணயித்தது. இருந்தாலும் 27 ஓட்டங்களினால் மாஸ்டர் பிளாஸ்டர் அணி சம்பியனாக வெற்றிவாகை சூடியது. ஆட்டநாயகனாக மாஸ்டர் பிளாஸ்டர் அணித்தலைவர் ஆஸாதும் தொடர்நாயகனாக ரெட் லயன்ஸ் அணியின் வீரர் ஏ எச் ஷிபானும் தெரிவானர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe