Ads Area

அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறி 2 மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்து பேராசிரியர் தம்பதி வெறிச்செயல்.

ஆந்திராவில் அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறி பெற்ற 2 மகள்களை பெற்றோரே நரபலி கொடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். 

இவரது மனைவி பத்மஜா. தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார். இவர்களது மகள்கள் அலேக்யா, சாயி திவ்யா. இதில் அலேக்யா மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். சாயி திவ்யா (22). பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான இசை கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்தனர்.  

இந்நிலையில் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட புருஷோத்தம், பத்மஜா தம்பதிகளுக்கு யாரோ ஒரு பூசாரி அறிமுகமானதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனைப்படி செய்தால் வீட்டில் அதிசயங்கள் நடக்கும் என தெரிவித்தாராம். இதை நம்பி பேராசிரியர் தம்பதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது இரண்டு மகள்களையும் நிர்வாணமானப்படுத்தி நரபலி கொடுத்து பூஜைகள் செய்துள்ளனர். 

இந்த கொடூரம் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்திய போது, புருஷோத்தம், பத்மஜா இருவரும், 'நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்பித்து விடுவார்கள்' என தெரிவித்தனர். 

இதையடுத்து பூஜையறையில் நிர்வாண நிலையில் இருந்த 2 மாணவிகளின் சடலங்களை மீட்டு பேராசிரியர் தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தாய் ததை மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பமே நன்கு படித்து இருந்தாலும் கூட பெற்றோரின் பக்தி கண்களை மறைத்ததால் இன்று 2 உயிர்கள் பறிபோயுள்ளன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe