ஒரு தடவை மற்றும் குறுகிய கால பாவனைக்கு உட்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மார்ச் 31ம் திகதி முதல் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் சுற்றுச்சூழல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 20 மில்லி மீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக் கூடிய விளையாட்டு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் காம்புகளுடனான பஞ்சுகளும் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.