முஹம்மட் ஹனீபா.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பாடசாலை அதிபர் எம்.என்.நாஸிர் அலி-(SLEAS) தலைமையில் அண்மையில் (2021/01/30) இடம் பெற்றது.
சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) அதிபர் எம்.என்.நாஸிர் அலி-(SLEAS) அவர்களின் அழைப்பின் பேரில் சம்மாந்துறையின் உயர் சபைகளான மஜ்லிஸ் அஷ்ஷுறா, நம்பிக்கையாளர் சபை, ஜம்மியதுல் உலமா சபை மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பாடசாலை முகாமைத்துவ சபை, பழைய மாணவர் அமைப்பின் பிரதிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர கலந்துரையாடல்கள் இடம் பெற்றது.