Ads Area

சாய்ந்தமருது கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

நூருல் ஹுதா உமர்

கலாச்சார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச கலாச்சார அதிகாரசபை இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருதளித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27) காலை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம். றிக்காஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம். லத்திப் கலந்து கொண்டார்.

இசைதுறைக்கு பாடகர் ஏ.ஏ. கவூர், பாடகர் ஏ.எல்.எம். தன்சில், பொல்லடிதுறைக்கு ஏ.எஸ்.அன்வர், தற்காப்பு கலை எம்.எஸ்.எம். பர்ஸான் ,நாடகத்துறை ஏ றனுபா, புகைப்பட துறை ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன், அபிநயம் பல்துறை கலைஞர் என்.எம். அலிகான், அறிவிப்புத்துறை ஆசிரியர் ஏ.எல். நயீம் கவிதை நாகூர் நஹீம், வைத்தியர் சனூஸ் காரியப்பர், போன்ற 10 கலைஞர்களுக்கு சுவதம் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை அனுசரித்து நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் முவஃபிகா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ.எம். றிம்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ.எச். சபிக்கா, ஏ.அஸ்ரப், யூ.கே.எம். றிம்ஸான் உட்பட சாய்ந்தமருது கலாச்சார அதிகாரசபை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe