ஏ.ஜே.எம்.ஹனீபா
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஸ் ஸிறாஜ் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் Online சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப் எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்களின் தலைமையில் நேற்று 2021/01/12ம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திரு. ஆர்.பீ.பி.திலகசிரி கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு வீ.ஜெகதீசன் ,உதவிப்பிரதேச செயலார் எம்.எம்.ஆசிக், பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம்..பாரிஸ், மற்றும் தலைமபீட முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், வங்கிச்சங்க முகாமையாளர் எஸ்.எம்.அம்சார், அஸ் .ஸிறாஜ் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் திரு ஏ.யோகராஜா , மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர்களான ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.ரீ.நஸார் வலய முகாமையாளரகள், வலய வங்கி உதவி முகாமையாளர்கள். மகா சங்கம், பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களதும் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் பணிப்பாளர் நாயகத்தினால் Online சேவை ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது வங்கி எனவும் குறிப்பிடப்படுகின்றது.