சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் அந் நாட்டவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை நடத்துவதற்கு வெளிநாட்டினரை அனுமதிக்க சவுதி அரேபியாவில் புதிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு சவுதி குடிமகன் ஒருவரின் நிறுவனத்தை நிர்வகிக்கவோ அல்லது நிறுவன உரிமை பெறவோ அல்லது அதிகாரங்களை பெறவோ முடியாத நிலையிருந்தது தற்போதைய சட்டத்திருத்தத்தின் படி இவை நீக்கப்பட்டுள்ளது.
புதிய சட்ட விதியின் படி வெளிநாட்டவர்களை சவுதிக்கு சொந்தமான நிறுவனங்களின் மேலாளர்களாக நியமிக்க முடியும் அதே போல் சவுதிகளுக்கு பதிலாக வெளிநாட்டினர்கள் சவுதி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.