தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் இடம் பெறும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும், போக்குவரத்து ஒழுங்குமுறைகளை சீராகப் பேணுவதற்காகவும் அங்கு போக்குவரத்துச் சட்டதிட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமையினை சவுதியில் வாழும் மற்றும் வாகனம் ஓட்டும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இதனடிப்படையில் சவுதியில் உள்ள பிரதான வீதிகளில் செல்லும் வாகனங்களின் வேகத்தினை கண்காணிக்க ஆங்காங்கே பல வீதியோரக் கெமறாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டிச் செல்லும் வாகனங்களை இந்தக் கெமறாக்கள் தானாகப் படம் பிடித்து அதனுாடாக அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அதிக வேகமாகச் செல்லும் வானங்களை படம்பிடிக்க வீதிகளில் வைக்கப்பட்டுள்ள கெமறாக்களை முன்னர் சாரதிகளுக்கு தெரியும்படி வைத்திருப்பார்கள், நாம் வாகனத்தில் செல்லும் போது கெமறாவின் முன்புறம் எம்மை எதிர் நோக்கியவாறே இருக்கும் அதனால் நாம் இலகுவாக அவற்றை அடையாளம் கண்டு எமது வேகக் கட்டுப்பாட்டைப் பேணலாம் ஆனால் தற்போது அவ்வாறில்லாமல் பல வீதிகளில் கெமறாவினை திருப்பி வைத்துள்ளார்கள் இவ்வாறு திருப்பி வைத்துள்ள கெமறாக்கள் எம்மை போகவிட்டு எமது வாகனத்தின் பின் பக்க இலக்கத் தகட்டினை படம் பிடிக்கிறது.
இவ்வாறு திருப்பி வைக்கப்பட்டுள்ள கெமறாக்கள் எம்மை போக விட்டு நமது பொறமண்டையில் அடிக்கும் படியே இருக்கிறது இவ்வாறான கெமறாக்களை அடையாளம் காண்பது கூட கடினமாகவிருக்கும்.
ஆகவே..!! சவுதியில் வாகனம் ஓட்டுபவர்கள் அளவுக்கு மீறிய வேகத்தில் உங்கள் வானங்களை ஓட்டிச் சென்று வீணாக அபராதங்களை உங்கள் தலையிலேயே கட்டிக் கொள்ளாதீர்கள்.