வௌிநாடுகளில் இருந்து மேலும் 178 பேர் இன்று (26) நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டார் மற்றும் அபுதாபியிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முப்படையினரால் பராமரிக்கப்படுகின்ற 95 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,996 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக COVID – 19 ஒழிப்பு தொடர்பான செயலணி அறிவித்துள்ளது.