தகவல் - சம்மாந்துறை அன்சார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண் ஒருவர் ஷார்ஜாவின் அல் தாவூன் பகுதியில் உள்ள 27 வது மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக ஷார்ஜா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 32 வயதான கே.எஸ் என அடையாளம் காணப்பட்ட பெண் பால்கனியில் இருந்து குதித்தபோது மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆரம்ப விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பெண் நிதி பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொள்ள உந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாடிக் குடியிருப்பின் காவலாளி சம்பவம் குறித்து, உடனடியாக போலீசுக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாலை 4 மணியளவில் சடலத்தை அல் காசிமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது மேலதிக விசாரனைகளை ஷார்ஜா போலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம் - https://gulfnews.com