தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடும் சகல நிகழ்வுகளுக்கும் மீண்டும் 20 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கடந்த பிப்ரவரி 4 அன்று கோவிட் பரவல் காரணமாக ஹோட்டல், திருமண அரங்கங்கள், அனைத்து விழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு பத்து நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இன்றோடு அந்த கட்டுப்பாடுகள் முடிவடையும் நிலையில், தற்போது மேலும் 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது இன்று ஞாயிற்றுக் கிழமை இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பின்வரும் விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1. சமூக நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. அனைத்து பொது பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
3. சினிமாக்கள், உட்புற பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் உணவகங்கள், மால்கள் அல்லது பிற பொது இடங்கள், ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட சுயாதீன விளையாட்டு மையங்கள் மூடப்பட்டுள்ளன.