Ads Area

வீட்டுப் பணிப்பெண்கள், சாரதிகள் என மேலும் சிலரைத் தவிர ஏனையவர்களுக்கு குவைத்திற்குல் நுழையத் தடை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்

குவைத் நாட்டில் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக குவைத் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதனடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வெளிநாட்டவர்கள் குவைத் நாட்டிற்குள் நுழைய இரண்டு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள அதே சமயம் சில சாராருக்கு மாத்திரம் குவைத்திற்குல் நுழைய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

01. வெளிநாட்டு இராஜதந்திரிகள் - Diplomatic missions and diplomats

02. மருத்துவ ஊழியர்கள் - Government Medical staff

03. சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை மருத்துவ ஊழியர்கள் - Private sector medical staff according to approved list from Ministry of health 

04. வீட்டுத் தொழிலாளர்களான சாரதி மற்றும் பணிப் பெண்கள் - Domestic workers (Maids, Drivers) and direct families of above related categories.

போன்றவர்கள் மாத்திரம் தற்சமயம் குவைத்திற்குல் நுழைய அனுமதியளிக்கப்படுவார்கள் எனவும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.

செய்தி மூலம் - https://kuwaitlocal.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe