இது குறித்து தூதரகம் தெரிவிக்கையில், “கொரோனாவிற்காக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியர்கள் துபாய் மற்றும் அபுதாபி வழியாக அண்டை நாடான சவுதி அரேபியா மற்றும் குவைத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது சவூதி மற்றும் குவைத் செல்ல முடியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் அனைத்து பயணிகளும், இந்தியாவுக்குத் திரும்புவதைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் செல்ல வேண்டிய நாடுகளின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரே தங்களின் பயணத் திட்டங்களை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளதன்படி, கடந்த டிசம்பர் 2020 முதல், குறைந்தது 600 இந்தியர்கள் சவூதி அரேபியாவிற்கு செல்ல வேண்டி அமீரகம் வழியாக பயணித்து அமீரகத்திலேயே சிக்கி தவித்ததாக கூறியுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், “வேகமாக வளர்ந்து வரும் சர்வதேச பயண நெறிமுறைகள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிப்பதன் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக சவூதி அரேபியா மற்றும் குவைத் செல்வதைத் தவிர்க்குமாறு பயணிகள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் இருந்து பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பயணிகள் அனைவரும் தாங்கள் இறுதியாக செல்ல வேண்டிய நாட்டின் சமீபத்திய கோவிட் -19 தொடர்பான பயண வழிகாட்டுதல்களை நன்கு தெரிந்துகொண்டு பயணத்திட்டங்களை செயல்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திக்கு நன்றி - khaleejtamil