தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் பிலிபைன்ஸ் நாட்டுப் பணிப் பெண் ஒருவர் துணியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 27 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பணிப் பெண் ஒருவரே இவ்வாறு தனது கபீலின் (sponsor) வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.
தனது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், நாடு செல்வதற்கும் தன்னிடம் எதுவித கோரிக்கைகளும் முன்வைக்கவில்லை எனவும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கபீல் (sponsor) பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://gulfnews.com