Ads Area

ஜனாசாக்களை அடக்கும் விவகாரம் நடைமுறைக்கு வரும் வரை அவசரப்படாதிருப்போம் - முன்னாள் பா.உ.மன்சூர்.

சம்மாந்துறை அன்சார்.

கொரோனா தொற்றினால் மரணமானவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி நடைமுறைப்படுத்தப்படும் வரை அவசரப்படாமல் பொறுமை காத்துப் பிரார்த்தனை செய்வோம் என சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும்  நபர்களின்  உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது என்ற இரண்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந் நிலையில் பிரதமரின் குறித்த கருத்துத் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் தனது முகநுால் பக்கத்தில் ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் அறிவித்தாலும் சரி, வர்த்தமானியில் வந்தாலும்...சரி, நடைமுறைக்கு வரும்வரை துவாச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe