தகவல் - சம்மாந்துறை அன்சார்.
பஹ்ரைனில் நாளை வியாழக் கிழமை முதல் இரு வாரங்களுக்கு பள்ளிவாசல்களில் இடம் பெறும் அனைத்து வகையான சமய நிகழ்வுகளும் நிறுத்தப்படவுள்ளதாக பஹ்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.
பஹ்ரைன் நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான உயர் சபை (Supreme Council for Islamic Affairs (SCIA) மற்றும் கொரோனா எதிர்ப்புக்கான தேசிய மருத்துவ குழு ஆகியோரின் பரிந்துரைகளுக்கு இணங்க இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்கள் முன்னிலையில், அஹ்மத் அல் ஃபதே இஸ்லாமிய மையத்திலிருந்து மாத்திரம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் மற்றும் பிரசங்கங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் நேற்று 759 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் பஹ்ரைன் நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பஹ்ரைனில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களும் இரு வாரங்களுக்கு மூடப்படவுள்ளது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa