முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் சம்மாந்துறை ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கமு/சது/ ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகபை மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.
சம்மாந்துறையில் மிகவும் பிந்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/சது/ ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைக் வழங்கி வைக்கக் கோரி பாடசாலை நிர்வாகத்தினரால் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களிடம் முன்வைத்து கோரிக்கைக்கு இணங்க இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.