தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட சவுதி அரேபியாவைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை சவுதிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் மீதான குற்றங்கள் நிறுபிக்கப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சவுதிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சவுதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தல்களின் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், SR300,000 வரை அபராதமும் விதிக்கப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://gulfnews.com