தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்திலிருந்து இலங்கைக்கு தனது நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க இருப்பதாக அல்-ஜெஸீரா விமான சேவை தெரிவித்துள்ளது. குவைத்திலிருந்து இலங்கை கொழும்பிற்கு வாரம் இரு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக அல்-ஜெஸீரா எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
இம் மாதம் (February ) 21ம் திகதி தங்களது முதல் விமான பயணத்தை இலங்கைக்கு ஆரம்பிக்கவுள்ளதாக அல்-ஜெஸீரா எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அல்-ஜெஸீரா எயார்லைன்ஸ் இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்திருப்பதானது குவைத்தில் வாழும் இலங்கையர்களுக்கும், இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளவுள்ளோருக்கும் பயனுள்ளதாக அமையும் என அல்-ஜெஸீரா எயார்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி (CEO ) தெரிவித்துள்ளார்.
குவைத்தில் உள்ள இலங்கையர்கள் அல்-ஜெஸீரா எயார்லைன்ஸ் ஊடாக ஆசனங்களைப் பதிவு செய்து இலங்கைக்குச் நேரடியாக செல்ல முடியும்.