தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் 65 மில்லியன் ரியால் பணம் மற்றும் 19 கிலோ கிராம் தங்கம் ஆகியவற்றை சவுதிக்கு வெளியில் கடத்த முயன்ற சவுதி மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்றுக்கு 64 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்கள் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து பணம் மற்றும் அவர்களது வாகனங்கள் ஆகியவற்றினையும் சவுதி பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட சவுதி நாட்டைச் சேர்ந்தவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை நிறைவுற்ற பின்னர் அவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.