Ads Area

இன்று சவுதியிலிருந்து 76 பேர் உட்பட 656 பயணிகள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

வௌிநாடுகளில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 656 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 06 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் சவுதி அரேபியாவில் இருந்து 76 பேரும் மாலைதீவில் இருந்து 58 பேரும் ஜப்பானில் இருந்து 52 பேரும் கட்டாரில் இருந்து 38 பேரும் ஏனையவர்கள் வேறு நாடுகளில் இருந்தும் வருகைத் தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை, இக்காலக் கட்டத்தில் 10 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 652 பயணிகள் நாட்டைவிட்டு புறப்பட்டும் உள்ளனர்.

அவற்றில் கட்டாருக்கு 144 பேரும் ஓமானின் மஸ்கட்டிற்கு 112 பேரும் புறப்பட்டவர்களுள் அடங்குவர் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 19 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe