Ads Area

சவுதியில் 10 மில்லியன் ரியால்களை சட்டவிரோதமாக கடத்த முயன்ற 5 வெளிநாட்டவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் 10 மில்லியன் சவுதி ரியால்களை சவுதிக்கு வெளியில் கடத்த முயன்ற 5 வெளிநாட்டவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 80 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 பேர் இவ்வாறு கூட்டாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் பணத்தை பயணப் பை, சாக்லேட் பெட்டிகள் மற்றும் ஆடைகள் போன்றவற்றில் மறைத்து வைத்து அதனை சவுதிக்கு வெளியில் கடத்த முற்பட்ட வேளை சவுதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது சட்டவிரோதமான முறையில் பணங்களை வைத்திருந்தமை,  பணத்தை இடமாற்றம் செய்தமை, கடத்த முயற்சித்தமை மற்றும் விமான நிலையங்கள் வழியாக தப்பித் செல்ல முயற்சித்தமை போன்றவற்றின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைகள் நிறைவுற்ற பின்னர் இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.

செய்தி மூலம் - https://gulfnews.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe