Ads Area

சவுதியில் ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையிட முயன்ற 3 பாகிஸ்தானியர் கைது.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவின் மதீனா நகரில் உள்ள ATM இயந்திரம் ஒன்றை உடைத்து பணத்தை கொள்ளையிட முயன்ற 3 பாகிஸ்த்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை சவுதி அரேபிய பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடப்பாரை மற்றும் சுத்தியல்களை பயண்படுத்தியே இவர்கள் TM இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர் இருந்த போதும் அவர்களால் அதனை உடைக்க முடியவில்லை.  

தகவலறிந்த சவுதி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், சம்பவத்தோடு தொடர்புடைய 3 பாகிஸ்தானியர்களை ஒரு மணி நேரத்திற்குல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

செய்தி மூலம் - https://gulfnews.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe