கொரோனா தொற்றுநோயைப் பற்றிய வதந்திகளை சமூக ஊடக தளங்கள் வழியாக பரப்பி பீதியை ஏற்படுத்தினால் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கைகளை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்று சவுதி உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
100 ஆயிரம் ரியால்களக்கு குறையாத அபராதம் , மற்றும் ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை வழங்கப்படும். இந்த தவறு மீண்டும் நடை பெற்றால் தண்டனை இரட்டிப்பாகும்.
மேற்கூறிய விதி மீறல் சவுதி அல்லாத ஒரு நபருக்கு விதிக்கப்பட்டால், அவர்கள் சவுதியிலிருந்து நாடு கடத்தப்படுவதன் மூலம் தண்டிக்கப்படுவார்கள், அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனையை அமல்படுத்திய பின்னர், அவர்களுக்குள் சவுதிக்குள் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
விபரம் - https://www.argaam.com
தமிழ் - சவுதி நிவுஸ்.