(எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம்)
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஏ.ஹசன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (8) கொழும்பில் இடம்பெற்றது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஹசன் அலிக்கு நியமனக்கடிதத்தினை வழங்கினார்.
இந்நிகழ்வில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளராக ஹசன் அலி நியமிக்கப்பட்டதையிட்டு, திகாமடுல்ல மாவட்ட மக்கள் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.