சென்னை
ராணிப்பேட்டையைச் சேர்ந்த வேணுகோபால், தனக்கு பெண் பார்த்துவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் காரில் ஓசூரில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கிலிகுப்பம் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் அடித்ததால், பின்னால் வந்த கார் லாரியில் மோதியது.
காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காரை ஓட்டி வந்த வேணுகோபாலும், அவரது தாத்தாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த வேணுகோபாலின் தாய், தந்தை படுகாயம் அடைந்தனர். அவர்களை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை உடைத்து போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வேணுகோபாலின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

