( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்தில் நேற்று (16) வரை கொரோனாவுக்கு 233 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 207 பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்களாவர். திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 119 பேர் மரணித்துள்ளனர்.
கிழக்கில் இதுவரை மரணித்த 233 பேரில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 121 பேரும், அம்பாறைப் பிராந்தியத்தில் 23 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 59 பேரும் , கல்முனைப்பிராந்தியத்தில் 30 பேரும் அடங்குவர்.
இதே வேளை கடந்த 6 நாட்களாக கிழக்கில் 60139 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மட்டு.மாவட்டத்தில் 22279 பேருக்கும் ,அம்பாறை பிராந்தியத்தில் 21504 பேருக்கும், திருமலை மாவட்டத்தில் 16063 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.
கல்முனைப் பிராந்தியத்திற்கு இதுவரை தடுப்பூசி செலுத்தும்பணி ஆரம்பிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 11744 பேருக்கு கொரொனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4000ஜக் கடந்த தொற்று நேற்றுவரை 4038ஆகியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய 4038 பேரும், திருகோணமலை 3844 பேரும் ,அம்பாறைப் பிராந்தியத்தில் 1791 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 2071 பேரும் தொற்று குள்ளாகியுள்ளனர்.
கிழக்குமாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட புள்ளி விபரங்களிலிருந்து இதனை அறியமுடிகிறது.

