சவுதி அரேபியாவில் இந்திய இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் கேரளா மாநிலம் கொல்லம் இத்திக்காரா பகுதியை சேர்ந்த சனல் (வயது-35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (புதன் 2021-06-16)) பிற்பகல் சவுதியின், அல் ஹசாவில் (Al Hasa, Saudi Arabia) சாலையோரத்தில் நடந்துள்ளது. பால் விநியோக நிறுவனத்தில் விற்பனையாளராக இருந்த சனல் கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வந்திருக்கின்றார்.
சனலுக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்கின்ற கானா நாட்டவரான சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாய்மொழி தகராறுதான் கொலைக்கு வழிவகுத்தது. மேலும் காயமடைந்த சக ஊழியரும் கானா நாட்டவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பொலிசார் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் உயிரிழந்த சனலின் உடலை அல் ஹசா மருத்துவமனை சவக்கிடங்கிற்கு மாற்றியுள்ளனர்.
Source - www.arabtamildaily.com and https://www.newsdirectory3.com

