Ads Area

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முதலாவது கொவிட் மரணம்!

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் முதலாவது கொவிட் மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்முனையையடுத்துள்ள மணல்சேனையைச்சேர்ந்த 85வயதுடைய மூதாட்டி திருமதி எஸ்.பூமணி என்பவரே இவ்விதம் அங்கு மரணமானவர்.

அவர் தனக்கேற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இறுதிநேரத்தில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.அவருக்கு வாயிலில் அன்ரிஜன் செய்ததும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே அங்குள்ள கொவிட் சிகிச்சை அதிதிவீர பிரிவில் அனுமதித்தனர். அங்கு கொண்டுசென்று சோதனை செய்ய ஆரம்பித்ததும் அவரது உயிர் பிரிந்தது.

பின்னர் அவரிருந்த கட்டிலை சுத்தம்செய்து அம்புலன்ஸ் சுத்தமாக்கப்பட்டடு அம்பாறை பிரேதஎரிப்புநிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த கொவிட் சிகிச்சை பிரிவு 10கட்டில்களளுடன் திறம்பட இயங்கிவருவதும் அருகிலுள்ள மருதமுனை கொவிட் இடைத்தங்கல் நிலையத்தில் சடுதியாக சிகிச்சைக்கான தேவை  ஏற்படுமிடத்து அவர்களை அனுமதித்து சுகதேகியாக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனம் இந்த முதலாவது மரணம் பற்றிக் கேட்டபோது

இதுவரை காலமும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை. பலர் நோய் முற்றும்வரை வீடுகளில் இருந்துவிட்டு இறுதிநேரத்தில் வருவதால் இத்தகைய துர்மரணங்கள் அநாவசியமாக ஏற்படுகின்றன. எனவே யாராவது குணங்குறிகள் தென்பட்டால் எந்தவயதுப்பிரிவினராகஇருந்தாலும் உடடியொக வைத்தியசாலையை நாடவேண்டியது கட்டாயமாகும் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe