Ads Area

அபுதாபி வீதியோரங்களில் அழுக்குப்படிந்த கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் 3000 திர்ஹம் அபராதம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

அபுதாபி வீதியோரங்களில் மற்றும் பொது இடங்களில் பல வாரங்களாக கைவிடப்பட்ட, நிறுத்தி வைக்கப்பட்ட அழுக்குப்படிந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி பொலிஸார் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அபுதாபி நகரத்தினை சுத்தமாக வைத்திருக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அழுக்குப் படிந்த கார்கள் மற்றும் கைவிடப்பட்ட கார்களை கைப்பற்றி அபராதம் விதிக்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கார்களின் உரிமையாளர்களுக்கு எதிராக 3000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

இவ்வாறான அழுக்குப்படிந்த மற்றும் துாசி படிந்த கார்கள் முசாபா பகுதி (Musaffah industrial area) மப்ராஹ் (Mafraq) பனியாஸ் (Baniyas) அல்-வாத்பா (Al Wathba) இடங்களில் அதிகளவாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யப்படாத கார்களினால் சுற்றுச் சூழலுக்கு மற்றும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அபுதாபி  நகராட்சி ஆய்வாளர்களால் இவ்வாறான கார்களை கைப்பற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அழுக்குப்படிந்த வாகனம் இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படும் பின்னர் 14 நாட்களின் முடிவில் வாகனத்தை அகற்றும்படியான அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும். அறிவிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குல் அவ்விடத்திலிருந்து குறித்த வாகனங்கள் உரிமையாளர்களால் அகற்றப்படாது விட்டால் அவை நகராச்சியினால் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://www.khaleejtimes.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe