தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் கட்டிட பணியிடம் ஒன்றில் கட்டுமான பொருட்களான மணல் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்றவற்றினை திருடிய குற்றச்சாட்டில் 12 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்ள்ளனர்.
குவைத் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் கூறுகையில், கட்டிட நிர்மாணப் பணிகள் நடைபெறும் இடம் ஒன்றில் வைத்து குறித்த நபர்கள் அங்கிருக்கும் மணல் மற்றும் இதர பொருட்களை லாரி ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்னுமொரு இடத்தில் கட்டிட நிர்மாணப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் 4 பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

