தகவல் - சம்மாந்துறை அன்சார்.
இந்த ஆண்டு ஹஜ் செய்ய விரும்பும் முஸ்லீம் பெண்கள் தங்களது மஹ்ரமான அதாவது ஆண் பாதுகாவலர்களின் துணையின்றி ஹஜ் கடமையினை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்குப் பொறுப்பான அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹஜ் கடமையினை தங்களின் ஆண் பாதுகாவலர்களின் துணையின்றி நிறைவேற்ற விரும்புவோர் ஏனைய பெண்களின் துணையோடு ஹஜ் கடமையினை நிறைவேற்ற பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சவுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். குடிமக்கள் மட்டும் குடியிருப்பாளர்கள் 60 ஆயிரம் நபர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹஜ் கடமையை நிறைவேற்ற பதிவு செய்வோர் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அல்லது ஒரு டோஸ் எடுத்து 14 நாட்கள் முடிவடைந்த அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில், அதன் பரவலைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடம் சவூதி அரேபிய பிரஜைகள் மற்றும் அங்கு வசிக்கும் 1,000 பேர் மாத்திரம் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

