Ads Area

கொவிட் 19 னால் முடக்கப்பட்டுள்ள புதிய வளத்தாபிட்டி மக்களுக்கு சம்மாந்துறை ஹோட்டல் & பேக்கரி உரிமையாளர்கள் அமைப்பினால் உதவிகள்.

கொவிட் 19 னால் முடக்கப்பட்டுள்ள சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட புதிய வளத்தாபிட்டி மக்களின் தேவையறிந்து சம்மாந்துறை ஹோட்டல் & பேக்கரி உரிமையாளர்கள் அமைப்பினால் பேக்கரி உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை ஹோட்டல் & பேக்கரி உரிமையாளர்கள் அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க அமைப்பின் உப தலைவரும் சமூக சேவை ஆர்வலரும் சம்மாந்துறை "றஹீம் ஹோட்டல் அன்ட் பேக்கரி" உரிமையாளருமான சகோதரர் றஹீம் அவர்களால்  இன்று புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் உள்ள 450 குடும்பங்களுக்கு பான், கறிபன், சீனி,தேயிலைத்தூள் உள்ளடங்கிய பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

இதே போன்று நாளை சம்மாந்துறை இஸ்மாயில்புரத்தில் உள்ள 200 கஷ்ட குடும்பங்களுக்கும் பொதிகள் வழங்கப்படவுள்ளன. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe