முழுமையான தடுப்பூசி பெற்று கத்தார் திரும்புவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுகப்பாடுகளை தளர்த்தும் 3ம் கட்டத்தின் ஒரு அங்கமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் முழுமையான தடுப்பூசிகைள் பெற்று கத்தார் திரும்புவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் தடுப்பூசிகள் கத்தார் சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருத்தல் வேண்டும் என்பதோடு, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று 14 நாட்கள் நிறைவடைந்து இருந்தால் மாத்திரமே தனிமைப்படுத்தல் கிடையாது.
சிவப்பு நிற பட்டியல் நாடுகளைச்சேர்ந்த தடுப்பூசி பெற்றவர்கள், கத்தார் விமானநிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பெறுபேறு நேர்மறையாக (positive) இருந்தால், தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு வரும் அனைவரும் அந்தந்த நாடுகளில் உள்ள கத்தார் சுகாதார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட மருத்துவ நிலையங்களில் 72 மணித்தியாலங்களிற்குள் PCR பரிசோதனை செய்து எதிர்மறை (Negative) பெறுபேற்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
Ehteraz – செயலி
பயணிகள் அவைரும் தங்களது கைப்பேசிகளில் Ehteraz செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருந்தல் வேண்டும். ஏற்கனவே கத்தார் சிம் காட்கள் இல்லாதவர்கள் www.ehteraz.gov.qa என்ற இணையதளத்திற்குச் சென்று பயணிக்க 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் வினவப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிறுவர்கள்.
00-11 வயது வரையான சிறுவர்கள் பெற்றோர்கள் பின்பற்றும் அதே அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவார்கள். 12-17 வரையானவர்கள் கத்தார் சுகாதார அமைச்சினால் பின்பற்றப்படுகின்ற தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தடுப்பூசி போடாத பயணிகள்
தடுப்பூசி போடாத, கத்தாரில் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளைப் போட்ட பயணிகள் அத்துடன் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் நிறைவடையாதவர்கள் கீழ்வரும் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கத்தார் சுகாதார அமைச்சினால் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடாதவர்கள் 5 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் (home quarantine). அத்துடன் 4 வது நாளில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் 5வது நாளில் விடுவிக்கப்படுவார்கள்.
கத்தார் சுகாதார மஞ்சல் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடாதவர்கள் 7 நாட்கள் தங்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் 6வது நாளில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் 6வது நாளில் விடுவிக்கப்படுவார்கள்.
கத்தார் சுகாதார அமைச்சினால் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போடாதவர்கள் 4 நாட்கள் தங்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் 9வது நாளில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் 9வது நாளில் விடுவிக்கப்படுவார்கள்.
சிவப்பு பட்டியல் நாடுகள்
Afghanistan, Bangladesh, Cameroon, Cuba, Georgia, India, Iran, Iraq, Kazakhstan, Kenya, Kyrgyzstan, Lebanon, Libya, Malaysia, Nepal, Nigeria, Pakistan, Palestine, Philippines, Russia, South Africa, South Suda, Sri Lanka, Sudan, Syria, Tajikistan, Tanzania, Tunisia, United Kingdom, Uzbekistan and Yemen.
மஞ்சல் பட்டியல் நாடுகள்
Algeria, Bahrain, Cyprus, Democratic Republic of Congo, Djibouti, Egypt, Indonesia, Jordan, Kuwait, Morocco, Netherlands, Portugal, Spain, Sweden, Switzerland, Thailand, Turkey, Uganda, United Arab Emirates, United States and Zimbabwe.
பச்சை பட்டியல் நாடுகள்
Australia, Austria, Azerbaijan, Canada, China, Ethiopia, France, Germany, Japan, New Zealand, Senegal and South Korea.
Thanks - Qatar Tamil.