குவைத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியராக வேலை செய்துவந்த இந்தியரான 41-வயதான நபர் குவைத்தின் அபு பதீரா (Abu Fatira) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தலையில் பலத்த அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் இந்தியர் இறந்து கிடந்த குவைத்தியின் வீட்டில் உள்ள அவருடைய மகன் உணவு Order செய்தார் எனவும், உணவுப்பொருட்களை இந்தியர் எடுத்து சென்ற நிலையில் அதற்கான பணத்தை கொடுக்க மறுத்துள்ளான் ஆனால் இந்திய ஊழியரோ பணம் செலுத்தினால் மட்டுமே தன்னால் திரும்பி செல்லமுடியும் என்று கூறியநிலையில், இளைஞன் இந்தியரை சரமாரியாக தலையில் தாக்கியதாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் தெரிகிறது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் தலைமறைவாக உள்ள குவைத்தியின் மகனை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கைது செய்தபிறகு அவனிடம் நடத்தபடும் விசாரணையில் கூடுதல் தகவல்கள் தெளிவாக தெரியவரும் என்று தெரிகிறது. இதையடுத்து தடயவியல் பரிசோதனைக்காக உயிரிழந்த இந்தியரின் உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த இந்தியர் இந்தியாலில் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
தகவல் - https://www.arabtamildaily.com