பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
வீடான்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த பொருட்களை கொள்கலனொன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியைச் சேரந்த 64 வயதுடைய சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள் அடங்கிய பொருட்கள் உட்பட 2 தோட்டாக்கள் உட்பட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொள்கலன் மீட்கப்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், சவளக்கடை பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.