Ads Area

பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை முன்னிட்டு கல்முனையின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பு பதாதைகள்.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை முன்னிட்டும் நிதியமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்ததை வரவேற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையின் பல்வேறு  பகுதிகளில் வரவேற்பு பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இன்று ( ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய நிதியமைச்சராக   பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள பல பகுதிகளில் வரவேற்பு வாசகங்களை அடங்கிய பதாதைகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் பெயர்  கட்சியின் தலைமைச்செயலாளர் சாகர காரியவசமினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) பசில் ராஜபக்ஷவைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

பசில் ராஜபக்ச 2007ம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தார். 

அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட  பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe