Ads Area

சவுதி பாலைவனப் பகுதியில் ஆடுமேய்க்க விடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்பு.

கத்தார் விசாவில் எலிஸம்மா என்ற இந்திய பெண்மணியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்று Sponsor சட்டத்திற்கு புறம்பாக சவுதி-கத்தார் எல்லைப்புறமான சால்வா பாலைவனப் பகுதியில் கடந்த 2.5 வருடங்களாக ஆடு மற்றும் ஓட்டகம் உள்ளிடவையை மேய்க்கும் வேலைக்காக விடப்பட்டுள்ளார். 

பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் இனிமேல் தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் இறந்து விடுவோம் என்ற நிலையில் பல கிலோமீட்டர் நடந்து முக்கிய சாலைகளில் வந்தநிலையில் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். 

இதையடுத்து காவல்நிலைய அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் மார்த்தாண்டம் மணி என்ற சமூக ஆர்வலர்கள் உதவி மூல‌ம் அவர் மீட்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். பெண்மணி ஒருவர் வளைகுடா பாலைவன பகுதியில் இப்படி ஆடு மற்றும் ஓட்டகம் மேய்க்கும் வேலைக்காக விடப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. எலிஸம்மா  விசாகப்பட்டனம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். 

நன்றி - https://www.arabtamildaily.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe