Ads Area

கத்தாரில் சட்ட விரோத விசா விற்பனையில் ஈடுபடுவோருக்கு 50 ஆயிரம் றியால்கள் அபராதம்.

கத்தாரில் சட்ட விரோத விசா விற்பனைக்கு 50 ஆயிரம் றியால்கள் அபராதம் or 3 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படவுள்ளதாக  உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை கையாள கத்தார் விமான நிலையத்தில் புதிய அலுவலகம் ஒன்றைத் திறக்கவுள்ளது.

அதன் மூலம் சட்ட விரோ விசா விற்பனை மற்றும் தலைமறைவான பணியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல் போன்ற வழக்குகள் கையாளப்படவுள்ளதோடு, இது போன்ற விடயங்களில் யாரும் ஈடுபட்ட வேண்டாம் என்பதாக உள்துறை அமைச்சு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சின் ஒரு அங்கமான தேடல் மற்றும் பின்தொடர்தல் துறை (Search and Follow-up Department) நடத்திய ஆன்லைன் வழி செயலமர்வில், முக்கிய அரச நிருவாக அதிகாரிகள், நிறுவனங்களின் மனித வளத்துறை முகாமையாளர்கள், அரச தொடர்பு அதிகாரிகள், தனியார் நிறுவன பிரதிநிதிகள் உட்பட 300க்கு மேபட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேற்படி செயலமர்வில், கத்தாரில் முதன்முறையாக சட்ட விரோத விசா விற்பனை செய்து சிக்குவோருக்கு 50,000 றியால்கள் அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே தவறை இராண்டாம் முறையாக செய்யும் போது, ஒரு இலட்சம் கத்தார் றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதாக தேடல் மற்றும் பின்தொடர்தல் துறை (Search and Follow-up Department)  தெரிவித்துள்ளது.

கத்தாரில் சட்ட விரோத விசா விற்பனை மற்றும், காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை கையாள கத்தார் விமான நிலையத்தில் புதிய அலுவலகம் ஒன்றைத் திறக்கவுள்ளது.

இந்த விவகாரங்கள், உள்துறை அமைச்சு நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு இணைந்து செயற்படும். அத்துடன் தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வதிவிட அனுமதி(Qatar ID) பெற்றுக்கொண்டவுடன் அவர்களது கடவுச் சீட்டுக்களை உரியர்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்காத நிறுவனங்களுக்கு 25000 றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது. என்பதாக உள்துறை அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thanks - Qatar Tamil.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe