தகவல் - சம்மாந்துறை அன்சார்.
எமன் நாட்டில் அண்மையில் 3 குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தலையில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தை ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தவர், கொலை செய்தவர், மற்றும் தனது சொந்தக் குழந்தையினை கொலை செய்தவர் ஆகிய மூவருக்கே இவ்வாறு பொது மக்கள் முன்னிலையில் தலையில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர்களது உடல்கள் கிரேன் மூலம் பொதுமக்கள் பார்வைக்காக தொங்கவிடப்பட்டது.
தண்டனை வழங்கப்பட்டவர்களில் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது குழந்தையினை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலைசெய்துள்ளார். மற்றவர் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார், மற்றவரும் கொலைக்குற்றம் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.