தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா ரியாத் நகரில் சர்வதேச பருந்துகள் கிளப்பில் (International Falcon Breeders Auction) இடம் பெற்ற ஏல விற்பனை ஒன்றில் கனேடிய அரிய வகைப் பருந்து ஒன்று 3 இலட்சத்து 50 ஆயிரம் சவுதி ரியால்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கனேடிய "ஜிம் வில்சன் ஃபால்கான்ஸ்" பண்ணையிலிருந்து பெறப்பட்ட இப் பருந்தானது ஒரு வயது நிரம்பியதாகும். பருந்தின் ஆரம்ப விலையாக 2 இலட்சத்து 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டு அரை மணி நேரத்தில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரியால்களுக்கு விற்கப்பட்டது.
மிகவும் விலையுயர்ந்த இப் பருந்தானது 1600 கிராம் எடையும் கொண்டதாகும்.