நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக காத்தான்குடியை சேர்ந்த ரீ.எம் எம் அன்சார் (நளீமி) இன்று 2021.08.25 காலை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த சுமார் நான்கு வருடங்களாக நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த இவர் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
புதிய பிரதேச செயலாளர் ரீ எம் எம் அன்ஷார் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது புதிய பிரதேச செயலாளருக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்தி வரவேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.