நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமானது இரானுவத்தினரின் பங்களிப்புடன் வீட்டுக்கு வீடு வழங்கப்படவுள்ளதனால் இது வரையிலும் கொவிட் தடுப்பு மருந்து ஏற்றிக்கொள்ளாத 60 வயதிற்கு மேட்பட்டோர் அனைவரும் உடனடியாக தங்களின் விபரங்களை தமக்குரிய கிராம சேவகரிடம் வழங்குவதன்மூலம் இச்சேவையினை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் இதுவரை நிந்தவூரில் அறிக்கை செய்யப்பட்டுள்ள 17 கொவிட் மரணங்களில்13 பேர் 60 வயதுக்கு மேட்பட்டவர்கள் என்பது கவனத்திற்குரியதாகும். தடுப்பூசி ஏற்றுவதன்மூலம் மரண அபாயத்தையும் நோய் தாக்கதின் தீவிரத்தையும் தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதனை கருத்தில் கொண்டு இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு முந்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். வருமுன்காப்போம் என அறிவித்துள்ளார்.