Ads Area

ஒன்பது வருடம் சேவையாற்றிய பிரதேச செயலாளரை தேடிச் சென்று பாராட்டிய அக்கரைப்பற்று முதல்வர்.

 நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றி இறக்காமம் பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.எஸ்.எம்.றஸானை  அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சந்தித்து சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும், 2019 முதல் பிரதேச செயலாளராகவும் சுமார் ஒன்பது வருடங்கள் பிரதேசத்தின் நிர்வாக சேவை கட்டமைப்பு வளர்ச்சியில் வினைத்திறன் மிக்க கடமையாற்றிய எம்.ஐ.எம்.றஸான் தனது பணிக்காலத்தில் பிரதேசத்தின் பொது நிர்வாகம், சமூக நலனோம்பும் சேவைகள், விவசாயம், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த மக்களின் மேம்பாட்டு வேலைத்திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட அயராது பாடுபட்டதனை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்ததுடன், பொது மக்கள் சார்பாக தமது மானசீக நன்றியறிதலையும், வாழ்த்துக்களையும் எத்தி வைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தவுடன், ஊர் கூடி கௌரவிக்க வேண்டிய ஓர் நிர்வாக ஆளுமையின் பிரியாவிடை என்றாலும் நிகழும் கோவிட் 19 அச்சுறுத்தல் அதற்கான அவகாசத்தை வழங்காதது குறித்து மாநகர பிதா தமது கவலையினை இங்கு தெரிவித்தார்.

குறித்த இச்சந்திப்பின் போது, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசீக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், மாநகர பிரதம முகாமைத்துவ அதிகாரி எம்.பீ. சலீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe