நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஏ எம் லத்தீப் நிந்தவூர் பிரதேச செயலாளராக இன்று (25) புதன்கிழமை கடமையேற்றுக் கொண்டார். நிர்வாக சேவையில் பன்முக ஆளுமை கொண்ட சட்டத்தரனியும் கல்விமானுமாகிய ஏ.எம். அப்துல் லத்தீப் பிரதேச செயலாளராக கடமையேற்கும் நிகழ்வு இன்று காலை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் உட்பட பிரதேச செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு புதிய பிரதேச செயலாளருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.