Ads Area

ஆப்கனில் படித்தவர்கள் சொந்த நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்.. அரசு பணிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அறிவார்ந்த மக்களை அகதிகளாக அழைத்துச் செல்லும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று தாலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.ஆப்கனில் புதிய அரசை நிறுவ தீவிரம் காட்டி வரும் தாலிபான்கள், நேற்று 2வது முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.அப்போது பேசிய தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ஆப்கனியர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது கவலை அளிப்பதாக கூறினார்.

ஆப்கனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை அமெரிக்கா ஊக்குவிக்கக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். ஆப்கனில் படித்து,மருத்துவ பொறியாளராக உயர்ந்தவர்கள் சொந்த நாட்டுக்கு சேவைபுரிய வேண்டும் என்று அவர் கூறினார்.காபூல் விமான நிலையத்தில் அதிகளவு மக்கள் கூடும் போது, அமெரிக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக குற்றம்சாட்டும் தாலிபான்கள், அங்கு காத்துக் கிடக்கும் ஆப்கனியர்கள் வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பஞ்ஷீர் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஆப்கன் மண்ணில் போரையோ வன்முறையையோ தாங்கள் விரும்பவில்லை என்று தாலிபான்கள் கூறியுள்ளனர். வங்கி நடவடிக்கைகள் இன்று முதல் வழக்கம் போல நடைபெறும் என கூறியுள்ள தாலிபான்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.அரசு பணிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத குழுக்கள் ஆப்கான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபான்கள் உறுதியளித்துள்ளனர். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe