Ads Area

ஆப்கானிஸ்தான் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி அனைத்தையும் உலக வங்கி நிறுத்தியது.

ஆப்கானிஸ்தான் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி அனைத்தையும் உலக வங்கி நிறுத்தியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும், குழப்பமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்காவே காரணம் என உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதற்காக வருந்தவில்லை. தனது முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

இதனால், முன்னதாக சர்வதேச நாணய நிதியமும், தனது நிதியுதவியை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe