தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் துபாயில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் தற்போது அவருக்கு இழப்பீடாக 1 மில்லியன் திர்ஹம் வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கை மதிப்பில் சுமார் 54 மில்லியன் ரூபாய்களாகும்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த வருடம் மே 24ம் திகதி துபாயில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்த 45 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த தரங்கா தில்ருஷி என்ற பெண் ஒருவர் துபாய் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த கார் அவரை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் பலத்த காயமடைந்த தில்ருஷி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் காரை ஓட்டி வந்தவரான இந்தியர் இதன் போது கைது செய்யப்பட்டு அவருக்கு 5000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
சக்கர நாற்காலியில் அமரும் படியாக பலத்த காயமடைந்த தில்ருஷி வழக்கறிஞர் ஒருவரின் உதவியோடு தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தார் கடந்த ஒரு வருட கால வழக்கின் பின்னர் தில்ருஷிக்கு சாதமான தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் அவருக்கு 1 மில்லியன் திர்ஹம் இழப்பீட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
தில்ருஷியின் வழக்கறிஞர் கூறுகையில்,
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தில்ருக்ஷி சக்கர நாற்காலியிலேயே இருந்து வருகிறார் மேலும் மற்றவர்களின் ஆதரவு இல்லாமல் அவளால் எதுவும் செய்ய முடியாது. அவளது உடல்நிலை காரணமாக, அவளால் வேலைக்குச் சென்று சாதாரண வாழ்க்கையை நடத்த முடியவில்லை. விபத்து வழக்கில் இழப்பீடு பெற அவள் என்னை அணுகினாள். சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட பிறகு, அவளுடைய நிலைமைக்கு உதவ நான் முடிவு செய்து அவளுக்காக வாதாடி இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
தில்ருக்ஷி இலங்கையில் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவராவார் அவர் துபாயில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளின்படி, அவளுக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவு மற்றும் மருந்து தேவை. "அவளுக்கு எப்போதும் அவள் பக்கத்தில் யாராவது தேவை. அவளுக்கு மருத்துவ உதவி தேவை. அவள் மனம் மிகவும் தெளிவாக இல்லை. எண்ணங்களின் தெளிவு இல்லை. இத்தகைய சூழ்நிலைகளில், அவளுக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவு தேவை எனவும் தெரிவித்துள்ளது.
தில்ருக்ஷி தற்போது இலங்கைக்குத் திரும்பியுள்ளார். தில்ருஷிக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர்.
செய்தி மூலம் - https://gulfnews.com